ஒரு காலத்தில் கணினியில் தமிழ் எழுத்துருக்களைச் சேர்ப்பதற்கே எழுத்துரு மென் கோப்புகளைத் தேடவேண்டியிருந்தது. பின்னர், தமிழ்த் தட்டச்சிற்குத் தமிழ் எழுத்துபெயர்ப்புகளைத்தேட வேண்டியிருந்தது. இன்று தமிழ்ப் பிழை திருத்திகளைத் தேடவேண்டிய காலமிது. இணையத் தமிழில் சந்திப்பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள், மரபுப் பிழைகள் உட்பட பலவானவை [எதிர்நீச்சல் தளம் உட்பட] மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். சிறந்த எழுத்தாளர்களின் எழுத்திலேயே பிழைகளைக் காணலாம். அவை அப்படைப்பைத் திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப் பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. பரவலான தமிழ எழுத்துப்பிழைகளைத் திருத்திக் கொள்ளவுதவும்
புதிய தமிழ்ப்பிழை திருத்தி
Posted by
நீச்சல்காரன்
.
Sunday, June 17, 2012
13
comments








13 comments:
Post a Comment