அப்படி போடு போடு போடு... என்கிற பாடல் தமிழ் தெரியாதவர்கள் பலருக்கும் அறிமுகமாயிருக்கும். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் யாரும் இப்பாடலை எழுத்துவடிவில் படிக்கமுடியாது. அதுவே அவர்கள் மொழியில் ಅಪ್ಪಟಿ ಪೋಟು ಪೋಟು ಪೋಟು என்றிருந்தால் எப்படியிருக்கும்? தமிழ் நாட்டிற்கு வேலை நிமிர்த்தமாக வந்து தமிழ் படிக்கத் தெரியாமல் பேசத் தெரிந்தவொரு ஹிந்திக்கார தாய்க்குலத்திற்கு ओरु चेलै वाङ्किनाल् ओरु चेलै इलवचम् என்று இருந்தால் எப்படியிருக்கும்? இதுவெல்லாம் ப்ராட்டிகளாக முடியாதுதான் அட்லீஸ்ட் இணையத்திலாவது இருக்கலாமே!
அதற்கான ஒரு செயலி தான் இது
Tamil Transliteration
புதிய தமிழ் ஒலிபெயர்ப்பு செயலி
Posted by
நீச்சல்காரன்
.
Saturday, October 22, 2011
9
comments
கூகிளும் மூடுவிழாக்களும்
Posted by
நீச்சல்காரன்
.
Friday, October 14, 2011
10
comments
கூகிள் அடிக்கடி தனது வலைக்கட்டமைப்பை [Design]/ இடைமுகத்தை[interface] மாற்றி அமைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்போதெல்லாம் சில முக்கிய சேவைகளையே மூடிவிடுகிறது. மாற்றங்கள் என்பது மவுசை பிடித்து ஆனா போட்ட காலம் தொட்டே இருக்கிறது ஆனால் அவை மேம்படுத்தப் பட்டே வந்ததேயென்றி கைவிடப்படவில்லை. இங்கு கூகிள் கைவிடப்படும் சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரிக்கவும் செய்கிறது. சில மாதங்களுக்கு முன் இணைய பயனர்கள் குறிப்பாக தமிழர்களும் மிகவும் கவலைப்படும்படியாக கூகிள் அகராதியை மூடியது. அதற்கு மாற்றாக கைகாட்டப்பட்ட கூகிள் மொழிமாற்றி[google translate] இன்னும் மொக்கையாகவே உள்ளது.








9 comments:
Post a Comment