கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]-II

. Wednesday 28 September 2011
13 comments

ஒரு பிளாக்கர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு urlல் எப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்க?
எந்தப் பதிவும் பிரசுரிக்கும் போது அதன் தலைப்பில் தமிழுடன் ஆங்கிலம் சேர்த்துப் பதியவும், publish செய்தப்பின் கவனித்தால் அந்தப் பதிவின் முகவரியில் உங்கள் ஆங்கில தலைப்பு அமர்ந்திருக்கும். அடுத்து அந்த தலைப்பில் உள்ள ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்தப் பதிவையே மறுபடியும் publish செய்யவும். அதனால் பதிவிடும் போதே சரியான/தேவையான ஆங்கில வார்த்தைகளை சேர்ந்து தலைப்பிட்டு பதியவும்


பேஸ்புக் கமெண்ட் பெட்டியை எப்படி வலைப் பதிவில் இணைப்பது?
http://developers.facebook.com/docs/reference/plugins/comments/

13 comments:

இணையவுலகிற்கு புதிப்பிக்கப்பட்டவை

. Thursday 15 September 2011
8 comments

பிளாக்கர் மறுமொழிகளுக்கான மதிப்புக்கூட்டு வசதியான nccodeல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தொடரியல்[syntax]

[im#]...[/im]
சில சமயம், மறுமொழியும் படங்கள் அளவில் பெரியதாக இருக்கலாம். அதனை இதுவரை கமெண்ட் பகுதிக்குள் அடைக்க முடிவதில்லை, மேலும் சில சின்னப் படத்தை கமெண்ட் பகுதி முழுக்க பெரிது படுத்தவும் முடிவதில்லை. அதற்கு தீர்வாக இந்த [im#] இட்டு படத்தின் முகவரி கொடுத்து [/im] என்று போட்டு மூடவும். இதனால் அந்தப் படம் கமெண்ட் பகுதிக்குள் அடங்கி விடும். [im]..[/im] என்கிற கோட்டின் அக்கா மகன் என்று கொள்க

[hi="yellow"] [/hi]
அடுத்து, மொழியப்படும் கருத்தில் ஏதாவது ஒரு வார்த்தைகளை முன்னிறுத்திக்[ஹைலைட்] காட்ட இந்த கோடை பயன்படுத்தலாம்.
என்னையா ரொம்ப [hi="yellow"]நல்லவன்னு[/hi] சொல்லிட்டாங்க. என்று கொடுத்தால் 'நல்லவன்னு' என்கிற பகுதி மஞ்சளாக highlight செய்யப்படும். விரும்பிய வண்ணங்கள் கொடுக்கலாம்.

8 comments:

பதிவுத்திருட்டைத் தடுக்க புதிய பூட்டு

. Thursday 8 September 2011
25 comments

தமது எழுத்தை பிறர் மறுபிரசுரம் செய்ய விரும்பாதவர்கள், முக்கிய ஆவணங்கள் பகிர நினைப்பவர்கள், காப்புரிமை வேண்டுபவர்கள், பேணிபாதுக்க வேண்டிய பதிவுகளைத் தருபவர்கள், கூகிள்,RSS வழியில பதிவை(அல்லது பதிவின் ஒரு பகுதியை)த் தர விரும்பாதவர்கள் போன்றோருக்கு இந்தப் பூட்டு பயன்படும்.
இந்தப் பூட்டைப் போட்டு எந்தப் பதிவை இட்டாலும் காப்பி செய்யமுடியாது என்று சமசீர் பாட புத்தகத்தில் கூறவில்லை அதனால் காப்பி செய்வது கஷ்டம் என்று கொள்க

பூட்டின் குணாதிசயங்கள்:
  • கூகிளும் பதிவைத் திருடமுடியாது;
  • ரீடரோ,மின்னஞ்சலோ, RSS ஓடை வழியாக படிக்கவே முடியாது(தளத்தில் மட்டும்தான் படிக்கமுடியும்);
  • சராசரி வாசகருக்குப் பதிவு பூட்டப்பட்டிருப்பது தெரியாது;
  • பிரபல பிரவுசர்களில் எல்லாம் காப்பி செய்யமுடியாது;
  • வாசகர்கள் முறைப்படி உங்கள் தளத்திற்கு வந்து படித்தால் தான் பதிவை படிக்க முடியும்.

25 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share