கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]-II

. Wednesday 28 September 2011
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

ஒரு பிளாக்கர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு urlல் எப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்க?
எந்தப் பதிவும் பிரசுரிக்கும் போது அதன் தலைப்பில் தமிழுடன் ஆங்கிலம் சேர்த்துப் பதியவும், publish செய்தப்பின் கவனித்தால் அந்தப் பதிவின் முகவரியில் உங்கள் ஆங்கில தலைப்பு அமர்ந்திருக்கும். அடுத்து அந்த தலைப்பில் உள்ள ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்தப் பதிவையே மறுபடியும் publish செய்யவும். அதனால் பதிவிடும் போதே சரியான/தேவையான ஆங்கில வார்த்தைகளை சேர்ந்து தலைப்பிட்டு பதியவும்


பேஸ்புக் கமெண்ட் பெட்டியை எப்படி வலைப் பதிவில் இணைப்பது?
http://developers.facebook.com/docs/reference/plugins/comments/


இந்த இணைப்பு சென்று உங்கள் தள முகவரி கொடுத்து get code பட்டனைத் தட்டுவதால் முழு நிரலியும்[HTML code] கிடைக்கும் உங்கள் தளத்தின் அனைத்து பக்கத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றால் டெம்ளைட்டில் போட்டு சேமிக்கவும்
அல்லது ஒரு பதிவுக்கு மட்டும் வேண்டும் என்றால் அந்தப் பதிவின் HTML modeல் கடைசியாக இந்த கோடை போட்டு பதிவிடவும் இதன் மூலம் அந்தப் பதிவில் மட்டும் பயன்படுத்த முடியும்
டெமோ பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பார்க்கலாம்-> ascii tamil


சில வலைபூக்களில் விளம்பர தொல்லை இருந்தாலோ அல்லது பிளாஷ் விஜெட்கள் அதிகம் இருந்தாலோ திறக்க அதிக நேரம் எடுக்கிறது; இவற்றை எளிதில் படிக்க முடியுமா?
blogger.com தளங்களைப் பொறுத்தவரை .blogspot.com/view அல்லது blogspot.com/?m=1 என பின்னிணைப்புக் கொடுப்பது மூலம் எளிதாகப் படிக்கலாம். இந்த வழியில் படிக்கும்போது தேவையில்லாத கட்ஜெட்கள், ஓட்டுப்பட்டைகள், நேரத்தைக் குடிக்கும் மென் நிரல்கள் தவிர்த்து வேகமாகத் திறக்க முடியும். மற்ற வேர்ட் பிரஸ் இன்ன பிறவில் தேவையில்லாத விளம்பரங்களை தடை செய்ய இந்த www.nomoreads.adout.org/ தளத்தைப் பயன்படுத்தலாம்.


பதிவு திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்கமுடியுமா?
எளியவழி உங்கள் பதிவின் ஏதாவது வாக்கியத்தை கூகிளில் போட்டு தேடவும், அதுவே துல்லியமாக காட்டிக் கொடுக்கும். படங்கள் திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க அந்தப் படத்தின் முகவரியை அல்லது அந்தப் படத்தையே கூகிள் இமேஜ்சில் போட்டுத் தேடலாம் கண்டுபிடிக்கமுடியும்
கூகுளின் இந்த அம்சத்தில் நீங்கள் படத்தை வலையேற்றி தேடலாம் அல்லது படத்தின் முகவரியைக் கொடுத்தும் தேடலாம்.


ஒரு பதிவை மட்டும் எப்போதும் முதல் பதிவாக வைக்கமுடியுமா?
பிளாக்ஸ்பாட்டை பொறுத்தவரை அது சாத்தியமே, விரும்பினால் உங்கள் அத்தனைப் பதிவையும் விரும்பிய படி வரிசைப் படுத்தமுடியும். என்றோ போட்ட ஒரு பதிவை மீள் பிரசுரம் செய்யாமல் அந்தப் பதிவை முகப்பு பக்கத்தில் கொண்டு வர அந்தப் பதிவின் தேதியை மாற்றினால் போதும். படத்தில் உள்ளது போல இன்றைய தேதி அல்லது latest தேதியைக் கொடுத்தால் அதன் படி பதிவு தளத்தில் தெரியும்.இதனால் புதிய பதிவு போடாமலே முதல் பக்கத்தில் வேறுபட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.
இவ்வழியில் தமிழ்மணத்தை ஒரு காலத்தில் ஏமாற்றலாம் இப்போது முடியாது என்பதால் இச்செய்தியிங்கே
****


இக்கேள்விகளுக்கு வேறு பதில்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
கடந்த முறை பதிலளிக்கப்பட்ட கேள்விகள் கேள்வி-பதில் [வலைப்பூக்கள்] பகுதி -1
இணையம் மற்றும் வலைப்பூக்கள் சார்ந்த கேள்விகளை இப்பகுதியில் நீங்கள் கேட்கலாம். இப்பகுதி தொடரும்...


பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்
கருத்துச்சொல்ல
எனக்கு இங்கிலீசு தெரியாது
Loading...

13 comments:

M.R said...

நல்ல பதிவு நண்பரே

M.R said...

அருமையான தகவல் நண்பரே தமிழ் மணம் முதல் ஒட்டு

NIZAMUDEEN said...

பல தகவல்கள்...
நன்றி...பல தகவல்கள்...
நன்றி...

மாணவன் said...

கேள்வி - பதில் பகுதி மூலம் வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை... தொடரட்டும்....

நன்றி நண்பரே!

suryajeeva said...

அருமை

MANO நாஞ்சில் மனோ said...

உபயோகமான பதிவு நன்றி...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பயனுள்ள தகவல்கள்..
நன்றி...

Prabu Krishna said...

நன்றி சகோ.

காந்தி பனங்கூர் said...

புதியவர்களுக்கு பல பயனுள்ள தகவலை அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி

மாய உலகம் said...

பயனுள்ள பகிர்வு நண்பா... மிக்க நன்றி

சந்திர வம்சம் said...

புதியவர்களுக்கு பல [co="red"]பயனுள்ள தகவலை[/co] அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!தங்கள் வலைப் பதிவில் பல தகவல்கள்.எல்லாம் பயனுள்ளவை.நன்றி.

சந்திர வம்சம் said...

[im]http://www.freedesktopwallpapers.net/flowers/flowerst.jpg[/im]








வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை...
பிடியுங்க பூங்கொத்து.

Follow by Email


Share/Save/Bookmark
Share