"சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்தில் தேக்கநிலைதான் மிச்சமுள்ளது. அரசு பணிவாரிய தேர்வுகளில்கூட குறிப்பிட்ட துறை பாடங்களுக்கு கலைச்சொற்கள் பஞ்சத்தால் ஆங்கிலவழி முறைதான் பின்பற்றப்படுகிறது. இவை இப்படியிருக்க இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாகத்தான் உள்ளது. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இப்பதிவு உதவலாம்.
28 comments:
Post a Comment