பல மெயில் அக்கவுண்ட் ஒரே ஜிமெயிலில்

. Wednesday 26 May 2010
4 comments

நம்மில் பலர் கட்டாயம் இரண்டிற்கு மேல் மின்னஞ்சல் முகவரிகள்(Mail id) வைத்திருப்போம், அவை தொழில் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது பதிவுலகம் சார்ந்தோ இருக்கலாம். எத்தனை முகவரிகள் வைத்திருந்தாலும் அவற்றை இனி ஒரே ஜிமெயில் அக்கவுண்ட் மூலமாக இயக்கலாம்.  அவை கட்டாயம் மற்றொரு ஜிமெயில் அக்கவுண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் POP access வசதிக் கொண்ட எந்தவொரு மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கலாம் உ.தா. யாஹூ, லைவ் போன்றவையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அது எப்படி?  

4 comments:

சுருக்க முகவரியின் சூத்திரங்கள்

. Tuesday 18 May 2010
2 comments

அன்றாட வாழ்வில் பெரிய பெயர்களை நம் தேவைக்கேற்ப சுருக்கி பயன் படுத்துவதுண்டு. பொதுவாக அது மனிதர்களின் பெயராகவும், நிறுவனங்களின் பெயராகவும் அதிகம் அமைவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் பழைய கிராமங்களின் பெயர்கூட மா.மூ.கோவில்பட்டி போன்று சுவாரசிய பெயர்களின் சிந்தையை கவரும். இத்தகைய பெயர் சுருக்கங்கள் நேரத்தை விரட்டும் அவசர யுகத்திற்கு மேலும் தேவையாகவுள்ளது. இணையவுலகில் அத்தகைய பெயர்ச்சுருக்க நடைமுறைகள் 2002 வாக்கில் வெளியாகின ஆனால் பேஷ்புக்குகளும் டிவிட்டர்களும் நம் வீட்டுக்கதவை அன்று தட்டாததால் ஜனரஞ்சக பயன்பாட்டுக்கு வரவில்லை. முக்கிய நிறுவனங்கள் மட்டும் தங்கள் நீளமான இணையதளப் பக்கமுகவரியை சுருக்கப்பயன்படுத்திக்கொண்டன. இன்றோ மேலும் பல சமூகதளங்கள் மற்றும் தனிநபர் தளங்ககளும் இணையவுலகை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்து சுருக்க பெயருக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த சுருக்கப் பெயர்கள் எப்படி வேலை செய்கிறதென்றால், அந்த சுருக்கப் பெயர் போட்டவுடனே அதன் தகவல்தளத்திற்குச்(database) சென்று நிஜ முகவரியைப் பெற்று அந்தப் பக்கத்தை திசைத் திருப்பும்(Redirect)


2 comments:

டாட் டிப்ஸ் (சித்திரை ,26)

. Saturday 8 May 2010
2 comments

இணையத்தில் அதிகம் உலாவுபவராக இருந்தாலும் அதிக வேலைப்பளு உள்ளவராகயிருந்தாலும் தங்களின் தூக்க நேரத்தை தியாகம் செய்யவேண்டிவரும். அதுவும் ஓரளவுக்கு மீறிப் போனால் உங்கள் ஆயுளை உங்கள் வேலைகளுக்காக பணையம் வைக்கவேண்டிவரும் என சமீபத்திய ஆய்வு குறிப்பொன்று கூறுகிறது. குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் அதேபோல அதிகபட்சம் 9 மணி நேரம் தான் தூங்க வேண்டும் என்கிறது. உங்களை விட உங்கள் பிரியமானவர்களுக்காகவாவது உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.


2 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share