இணையத்தில் அசலாக வேட்டையாடலாம் -I

. Thursday 25 February 2010
3 comments

இணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான்  என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.


தேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது "தேடும் விதம்" மற்றும் "தேடுமிடம்".


3 comments:

பாஸ்வேர்ட் திருடித்தரும் கூகிள்

. Wednesday 17 February 2010
3 comments


இந்த இடுகையை  போடுவதற்கு முன் ஆய்ந்து பார்த்தேன் இதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை காரணம் சில தளங்களே தங்கள் கடவுச்சொல்லை எந்தவொரு பாதுகாப்பின்றி பொதுவாக்கிவிட்டுள்ளது. அதை லாவகமாக எடுப்பதே தேடுவோரின் வேலை. சில குறிப்பிட்ட கட்டளைகளின் படி தேடினால் கடவுச்சொல் கொண்ட கோப்புகள் கைக்கு வரும். இந்த  முறை கூகுளுக்கு மட்டும் பொருந்துவதில்லை எல்லா தேடுதளங்களுக்கும் பொருந்தும் . ஆனால் கூகிள் தான் அதிகளவில் தேடித்தருவதால் இப்படிச்சொல்லலாம் .


inurl:passlist.txt
inurl:passwd.txt

அதிகமாக .xls  கோப்புகளிருப்பதால் இந்த நிரலி துணைசெய்யும் 
“login: *” “password= *” filetype:xls


என்ற குறிகளை எந்தவொரு தேடுதளத்தில் போட்டாலும் கடவுச்சொல் கொண்ட .xls  வகை கோப்புகள் கிடைக்கும்.



இதில் குறிப்பிட வருவது என்னவென்றால்  எந்தவொரு காரணத்தைக் கொண்டும் உங்கள் கடவுச்சொற்களை எந்தவொரு கோப்பிலும் இட்டுவைக்காதீர்கள். அதையும் இணையத்தில்  லாவகமாக திருடக்கூடும். ஏனெனில் சிலர்  அதிகமான தளங்களில் பயனர் பெயர் வைத்துக்கொண்டு  தங்கள் கடவுச்சொல்லை மறக்காமலிருக்க கோப்புகளில் பதிந்து வைக்ககூடும். அப்படியிருந்தால் அதை அழித்துவிடுங்கள் .



3 comments:

கூகிள் செய்த தவறு பஷ்(BUZZ)

. Friday 12 February 2010
12 comments


கூகிள் என்ற மாபெரும் இணைய சக்தி அண்மையில் கூகிள் பஷ் என்ற சேவையை பேஷ்புக், டிவிட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியது. நல்லதொரு சேவைதான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதன் பயன்பாட்டில் மிகப்பெரிய 'loop hole'லாக தகவல் திருட்டுக்கு துணைபுரிகிறது. கூகிள் சமூக வலைப்பின்னலையும், வணிகப்பின்னலையும், போட்டுக் குழப்பி பெரிய தவறைப் புரிந்துவிட்டது. தவறாக கருதக்காரணம் அந்த பஷ் சேவையை உயிரூட்டியப்பின் நமது இ-மெயில் தொடர்புகள் அனைத்தும் நமது அனுமதியின்றி வெளியுலகிற்கு போதுவுடைமையாக்குகிறது, இதன் மூலம் நமது இமெயில் தொடர்புகள் அனைத்தும் நமது பாளோயர்களாக மாற்றுவதனால் எளிதாக வேறுமனிதர்கள் நமது தொடர்புகளை அறியமுடிகிறது. இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால் வணிகரீதியாகவோ, தனிப்பட்ட நட்பாகவோ நாம் வைத்திருக்கும் இமெயில் தொடர்புகள் போதுவுடைமையாக்கப்படுவது தகவல் திருட்டுக்கு துணைபோகுமென்பதில் ஐயமில்லை. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே சில சம்பவங்கள் நம்மையும் சற்று சிந்திக்கவைக்கிறது. உ.தா.) ஒருவர் இரண்டு வேறுப்பட்ட கம்பெனியுடன் ரகசியத் தொடர்புவைத்திருந்தால்  பஷ்ஷின் மூலம் தொடர்புகள் வெளியுலகிற்கு வெளிவரும், இங்கே தகவல் உரிமைமீறப்படுகிறது (Serious Privacy Flaws‎)

எந்தவொரு மென்பொருளும் தகுந்த சோதனைக்குட்பட்டு தான் வெளிவரும் அப்படி வந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆனால் கூகுளில் மாற்று ஏற்பாட்டிலும் ஓட்டையுள்ளது. பஷ்ஷை turn off செய்தாலோ அல்லது settings->label->hide செய்தலோ பஷ்ஷை விட்டு வெளிவந்துவிட்டதாக எண்ணமுடியாது காரணம் இவை வெறும் பஷ்ஷை மறைக்கத்தான் செய்கிறது. உண்மையில் வெளி உலகில் உங்கள் தகவல் அனாமத்தாகத்தான்யுள்ளது எவரும் எவருடையத்தொடர்பையும் கண்டுவிடலாம். சமூக தளத்தில் உள்ளவர்களைவிட வியாபாரரீதியாக ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது பேரிடர்.

இதற்கான பணிகளை கூகிள் தொடங்கிவிட்டாலும் முழுவதுமாக விலகக்கூடிய வசதியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. எனவே புதிதாக பஷ் பயன்படுத்த எண்ணுபவர்கள் சற்று யோசித்து தொடங்கவும். 
 நல்ல அறிமுகம்தான் ஆனால் தகுந்த வழிமுறை செய்யாவிடில் பஷ் புஷ்ஷா? என்ற கேள்வி வரும்.

ஏற்கனவே ஆரம்பித்தவர்கள் தவிர்க்க எண்ணினால் சில யோசனைகள் (இவை ஓரளவு பயன்தரும்)

1- மேற்குறிய படி turn off அல்லது settings->label->buzz->hide செய்யலாம்

2-உங்கள் profile பக்கத்தை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் உதா. http://www.google.com/profiles/*********

3-உங்களை பின்தொடரும் நபர்களை block செய்யுங்கள் நீங்கள் பின்தொடருபவரை unfollow செய்யுங்கள்.

ஒரு விஷயம் 

நமது யாஹூ தொடர்புகளோ அல்லது வெற்றுத் தொடர்புகளோ வெளியே தெரிவதில்லை 

ஆனால் வலையுலகிற்கு இவை பெரிய வரப்பிரசாதம்தான் (*conditions applied)

பிற்சேர்க்கை:
பிப்18 2010 ன் படி பஷ்க்கு ஒரு கட்டுப்பாட்டை அறிமுகம்செய்துள்ளது கூகிள்.
செட்டிங்க்ஸ்ல் பஷ்ஷுக்கு தனி வசதியை செய்துள்ளது அதனை திருத்துவதன் மூலம் பஷ்ஷை பயன்படுத்தலாம். gmail->settings->buzz
related information:

12 comments:

ஹிந்தி கற்பது எளிது

. Tuesday 2 February 2010
12 comments

நம்மில ஹிந்தி தெரியாத பலர் தமிழகத்தை விட்டு மாநிலங்களுக்கு சென்றோமேயானால் ஹிந்தி தெரியாமல் தவிப்பதுண்டு. கூடுதலாக ஒரு மொழி கற்பது கூடுதலான பலமே. தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் புதிய மொழிகள் கற்பது எளிதே!. இந்த இடுகையில் இணைய வழியாக ஹிந்தி படிபதற்கான சில பயனுள்ள தளங்களை பகிர்கிறேன்.



http://www.omniglot.com/writing/hindi.htm இந்த தளத்தின் மூலமாக ஹிந்தி எழுத்துக்களை எளிதாகக் கற்கலாம்.

இணையவழியில் பாடவாரியாக் கற்றுக்கொள்ள சில தளங்கள்


சரி படித்துவிட்டச்சு, அனால் புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லையா ? இதோ சில ஹிந்தி அகராதிகள்
http://www.alphadictionary.com/directory/Languages/Indo,045Iranian/Hindi/அனால் எதுவும் ஹிந்தி -தமிழில்லை ஹிந்தி -ஆங்கிலமாகத்தான் உள்ளது

என்னதான் 30 நாளில் கற்றுக்கொடுக்கும் புத்தகங்களோ தளங்களோ இருந்தாலும் அவசர நேரத்தில் நமக்கு தேவையான வாக்கியங்களை தருவதில்லை. புதியபுதிய வாக்கியங்களை மற்றவருடன் பேசியே கற்க வேண்டிய நிலையுள்ளது. கூகுளின் http://translate.google.com/#en|hiஇந்த சேவை மூலமாக நமக்கு தேவையான வாக்கியங்களை நாமே பெற்றுக்கொள்ளலாம்
உத: "நேற்று நீங்கள் எனக்கு நூறு ரூபாய் கொடுக்க மறந்துவிட்டீர்கள்"
என்று கேட்க வேண்டுமானால் இதில் "Yesterday you forgot to give me 100 rupees" என்று கேட்டால்
"कल तुम मुझे 100 रुपए देना भूल गया" <எனச் சரியாக மொழிமாற்றிக்கொடுக்கும். {தமிழில் அடிக்கும் வசதியில்லை, ஆங்கிலம் மூலமாக ஹிந்தி வாக்கியங்களைப் பெறலாம் } Learn Hindi via Tamil - तमिल सीखने के माध्यम से हिन्दी How to learn Hindi? - कैसे हिन्दी सीखने के लिए? Hindi websites - हिन्दी वेबसाइट Hindi to Tamil - हिन्दी के लिए तमिल




முப்பது நாளில் கற்றுக்கொடுக்கும் ஒரு இ-புத்தகம் (ஆங்கிலம்)

மேலும் ஹிந்தி தொடர்பான சுட்டிகள் இங்கே உள்ளது
அனைத்து மொழியையும் கற்றுவை தாய்மொழியில் பற்றுவை

12 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share