இது புதிய பதிவருக்கான இடுகை மட்டும் இல்லை பாருங்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாமே.
இந்த திரட்டியில் ஒருமுறை இணைத்தால் போதும் நாம் இடும் பதிவுகள் தானாக திரட்டப்படும்.
பதிவர்களுக்கு தெரிந்து தெரியாமலும் வரும் பிரச்சனை என்னவென்றால் தங்களது பதிவுகள் திரட்டியில் வரும் போது அவர்கள் பெயரோ அல்லது பதிவின் பெயரோ தெரியாமல் இருக்கலாம். இன்னும் சிலரின் பதிவுகள் திரட்டிக்கே வராமல் இருக்கலாம். இது எப்படி முடிகிறது? பொதுவாக தளத்தின் பதிவுகளை செய்தியோடையின் வழியாக தமிழ்மணம் திரட்டுகிறது. அந்த ஓடை அடிப்பட்டால் அன்றி இந்த பிரச்சனை வருவது குறைவு.
பழைய டெம்ப்லட்
புதிய டெம்ப்லட்
படத்தில் உள்ளபடி feeds அடைபட்டாலோ அல்லது Post Feed Redirect URL பகுதியில் தவறான முகவரி கொடுத்தாலோ இந்த தளத்திலிருந்து எந்த ஒரு செய்தியும் திரட்டிக்குப் போகாது பதிவும் திரட்டப்படாது.சில சமயம் பதிவுகள் இணைக்கும் போது "புது இடுகை எதுவும் காணப்படவில்லை” என்று வந்தால் உங்கள் feed முகவரியில் தான் பழுது, மேலே சொன்ன வழிகளைச் செய்துவிட்டு ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து மீண்டு முயன்று பார்த்தால் பதிவை சேர்க்கமுடியும். சரி, இங்கே சரியான feedburner முகவரி கொடுத்தாலும் பெயர்கள் விடுபடுகிறதென்றால் அதற்குக்காரணம் செய்தியோடையின் வகை RSS1.0 RSS2.0 Atom போன்ற வகைகளே காரணம். அதற்கு முன் நீங்கள் கொடுத்த feedburner முகவரி சரிதான என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். {கீழே சுட்டிக் காட்டப்பட்ட பகுதியில் உள்ள முகவரி}
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானது. எனவே feedburner உபயோகிப்பவர்கள் தமிழ் மணத்தில் எந்த தகவலும் தடங்கலில்லாமல் கிடைக்க feedburner -> optimize-> convert format ATOM0.3 கொடுக்கவும். வேறு ஏதாவது மாற்றிக் கொடுத்திருந்தால் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது.
கீழ் உள்ள படம் இரண்டு ஓடைகளின் ஒப்பிடு. ஒன்றில் பதிவரின் பெயர் பகுதி விடுபட்டுள்ளதை காணலாம்.
இதற்கு அடுத்த பிரச்சனை feedburner உபயோகிப்பவர்கள் பக்கத்தில் தமிழ் மண ஓட்டுபாட்டை மந்தமாக இருப்பது. இதனால் ஓட்டுப் போடமுடியாமல் போகும். அடிப்படையில் feedburner புள்ளிவிவரக் கணக்கிற்காக பக்கத்தின் முகவரியுடன் இன்னும் சில மாறிலிகளை கொடுத்திருப்பதால் இப்பிரச்சனை.உதா.?utm_source=feedburner&utm_medium=feed&u என்று இருக்கும் இதை நீக்க analyze-> configure stats->
Item views
Item link clicks
Item enclosure downloads என்ற மூன்றையும் தேர்வு செய்யாமல் சேமிக்கவும். ஆனால்இப்படி செய்வதன் மூலம் படிப்பவர்கள் புள்ளிவிவரங்களை சேமிக்கமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
சிக்கலே இல்லாமல் இருக்க இந்த Post Feed Redirect URL பகுதியை காலிசெய்வது ரெண்டு கோடி புண்ணியம் ஆகும்.
தமிழ் மணத்தின் கீழ் பகுதியில் உள்ள வகைப்பாட்டில் பதிவுகள் சேர அந்தந்த குறிச்சொற்களை பயன்படுத்தவும். சிலருக்கு அந்த குறிச்சொற்கள் தேவையில்லை என நினைத்தால் குறிச் சொற்களுடன் பதிவை திரட்டியில் இணைத்துவிட்டு பிறகு குறிச் சொற்களை பதிவிலிருந்தும் நீக்கிக் கொள்ளலாம்.
ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவை நிரந்திர குறிச்சொற்களாக உள்ளன.
வாசகர்களுக்கு
ஒரு பதிவை திரட்டியிலிருந்தே முழுவதும் படிக்கமுடியும் என்பது தெரியுமா? [இதன் முதல் கேள்விக்கு இன்னொரு பதில்] இந்த print பட்டனை சொடுக்குவதன் மூலம் அந்தப் பதிவை முழுதும் படிக்கலாம். ஆனால் அந்தத் தளத்தில் ஓடை பாதியாக இருந்தால் பாதி பதிவை மட்டும் படிக்கமுடியும்.
முறையே அடுத்துள்ள பட்டனை pdf வடிவில் பதிவை சேமித்துக் கொள்ள உதவும், அடுத்த பட்டன் பதிவைப் பற்றி புகார் அளிக்க உதவும்.
நிர்வாகத்தினருக்கு,
ஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.
ப்ளாக்கரில் இன்னொரு ட்ரிக் உள்ளது. Post Feed Redirect URL பகுதியில் தேவையான மற்றதளத்தின் ஓடையைக் கூடக் கொடுத்து, புதிதாக வேற தளத்தையும் திரட்டியில் இணைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு தளத்தின் default செய்தியோடைக்குப் பதிலாக summary செய்தியோடையை சேகரித்துக் கொண்டால் மேற்கூறிய feedburner பிரச்சனையும் போலிப் பதிவுகள் பிரச்சனையும் தீரலாம்
மைன்ஸ் ஓட்டு போடுபவர்களுக்கு,
அண்ணன் கூறியது போல இத்திரட்டியின் ஓட்டு முறைகளால் பாதிப்பு வருகிறது அதேவேளையில் இப்படி சொல்லாமல் தளத்தில் இணைத்துக் கொண்டால் அதே ஓட்டு முறைகளால் பிரபலப் படுத்தலாம். குத்தப்படும் மைனஸ்களை ப்ளஸ்ஆக்கலாம். இந்தப் பதிவுக்கு மைனஸ் ஒட்டுக்களை குத்திப்பார்க்கவும். இச்சலுகை இந்த தளத்தில் உள்ள இந்த பதிவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று சொல்லி சபை கலைகிறது.
Disclaimer:தமிழ் மணத்தின் உள்கட்டமைப்புப் பற்றி அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. இப்பதிவில் பதிந்தவையெல்லாம் எனதனுபவமே!
டெக்னிக்கலாக மைனஸ் குத்தியவர்களுக்கு சபாஸ்
தெரியாமல் குத்தியவர்கள் இனி உஷார்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
.
Updates:
தமிழ் மணத்தின் ஓட்டு உரலியை தனியாகப் பயன்படுத்த தற்போது தடை செய்யப்படுலதால் அவ்வகை ஒட்டுக் குழப்பங்கள் தீரலாம்.
தமிழ்மணம் ஒவ்வொரு வகைக்கும் தனியா ஓடைகளை வழங்குகிறது ரீடரின் மூலம் பின் தொடரலாம்





















34 comments:
Post a Comment