விருதுகள், வாழ்த்துக்கள், டெம்லைட் பின்னூட்டம், புகைப்படம் என பின்னூட்டத்தில் படங்கள் இணைக்கும் வசதி இருந்தால் சிறப்பாகயிருக்கும். தற்போதைக்கு ப்ளாக்கர் மறுமொழிகளில் bold italic anchor ஆகிய tagகள் தவிர மற்ற HTML நிரலிகளை எடுத்துக் கொள்ளாது. ஒரு பதிவிற்கு கருத்தை எழுத்தாக சொல்லாமல் கூகுளில் தேடி ஒரு கருத்துப் படத்தை எடுத்து அந்தப் பதிவுக்கு மறுமொழியாகக் கொடுக்கும் காலம் விரைவில் கூகிள் கிருபையால் வரலாம். அதுவரை என்ன செய்வது?
எதார்த்தமாக பொட்டிதட்ட ஒரு நிரலி வந்துள்ளது.
<script src='http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/nccode.js' type='text/javascript'/>
இந்த சின்ன வரிகளை சேர்ப்பதன் மூலம் ஓடும் பெயர்கள்,வண்ண எழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு மற்றும் படங்கள் ஆகியவை மறுமொழிகளில் கிடைக்கும்
படங்களுடன் இந்த சில வசதிகளை சேர்த்துள்ளேன். மேலும் சில HTML tagகள் தேவைப்பட்டால் மறுமொழியிடலாம் முயற்சிக்கிறேன்
எப்படிப் பயன் படுத்துவது?
படங்கள் இணைக்க [im].....[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க எண்களை மாற்றலாம் [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க [co="red"]...[/co]
இதுதான் குறிப்பு. உங்களுக்கு ஒரு படம் இணைக்க வேண்டினால் [im] என்றுப் போட்டு இடம் விடாமல் அந்தக் குறிப்பிட்ட பட முகவரியைக் கொடுத்து [/im] என முடிக்க வேண்டும்.
உதாரனத்திற்கு.
[im]https://sites.google.com/site/neechalkaran/pictures/congrats.jpg[/im] என்று கொடுத்தால் இப்படி படம் காட்டும்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் பயன்படுத்துங்கள் ஆனால் இந்த குறிப்புகளை உங்கள் கருத்துரையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உதாரணத்திற்கு.
Settings->comments->Comment Form Message பெட்டியில்
மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும் அது போல ஓடும் எழுத்துக்கு [ma]...[/ma], எழுத்தின் அளவிற்கு[si="2"]....[/si], எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுக்கலாம்.
அல்லது
இந்த தளத்தில் <a href="http://ethirneechal-lab.blogspot.com/2010/11/nccode.html">NCcode</a>ல் மறுமொழிகள் எழுதலாம்
என்று தகவலைச் சொல்லலாம்
எப்படி இதை சேர்ப்பது?
மேலே குறிப்பிட்டுள்ள அந்த சின்ன வரிகளை உங்கள் design ->edit HTML-> சென்று </body> என்பதற்கு மேலே போட்டுவிடவும்.அவ்வளவே
இது பொதுவாக ஜாவா தடை செய்யப்படாத எல்லா பிரவுசரிலும் வேலை செய்கிறது. உங்களால் கீழே உள்ள மறுமொழிப் படங்களைப் பார்க்கமுடிந்தால் உங்களுக்குத் தடையில்லை.
மேலதிக விளக்கம்
தொடர்புடைய இடுகை: ப்ளாக் கமெண்டில் வெர்சுவல் எழுத்துக்களால் மறுமொழியலாம்
பிளாக்கர் மறுமொழிவரிசையை வரிசைப்படுத்த NCsort
பிளாக்கர் மறுமொழிக்கு ரிப்ளை வழங்க NCreply
பிற்சேர்க்கை:
அனுமதி வாங்கியும், அனுமதி தரும்படியும் இந்தப் பதிவை வெளியிட்டுள்ள பிற மொழி வலைப்பதிவுகள்.
Picture comments for blogger -english
New Script Add Images And Colored Text To Blogger Comments -english
How to add images in comments -english
आपके ब्लॉग पर रंग बिरंगी टिप्पणियाँ -Hindi
टिप्पणी के साथ किसी भी तस्वीर को भी पोस्ट कर सकते हैं -Hindi
കമന്റില് ഇപ്പോള് ചിത്രവും ഉള്പ്പെടുത്താം - malayalam
Cara Buat Komen Bewarna,Komen Skrol dan Letak Gambar Pada Komen -Malay
am-am малини за Blogger -Bulgarian
دروس وإضافات بلوقر هنا لعرض الدروس المتخصصة في البلوقر من دروس لتعديل القوالب أو إضافات تحسن المدونات -Arabic
Thanks to one and all
பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா?
Posted by
நீச்சல்காரன்
.
Friday, November 5, 2010
பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்
| கருத்துச்சொல்ல | ||
Loading... | ||



















69 comments:
Post a Comment