பிளாக்கர் தமிழ் மறுமொழிப்பெட்டி அறிமுகம்

. Saturday, September 4, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

இனி தனியாக தமிழில் தட்டச்சு செய்து காப்பி அடிக்கதேவையில்லை என்று இதைப் பயன்படுத்திய ஒருவர் சொல்லிச்சென்றார்.


கூகுளின் மொழிமாற்றி சேவையையும் பிளாக்கரின் மறுமொழி சேவையையும் விளையாட்டாக இணைக்க முனைகையில் எஞ்சியது தமிழ் மறுமொழிப் பெட்டி. வேர்ட்பிரஸ் தளங்களைப் போல நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யும் விதத்தில் உருவாகியுள்ளது. தமிழ் தட்டச்சுக்கென்று தனியான பெட்டி வைக்காமல் இந்த பெட்டியை வைப்பதன் மூலம் நேரடியாக தமிழில் அடிக்கலாம் அதுஅப்படியே பிளாக்கர் மறுமொழிப் பெட்டிக்கே சென்றுவிடும். அங்கே வாசகரின் கணக்கு சரிபார்க்கப்பட்டு கருத்துக்களை பிளாக்கர் வாங்க சம்மதம் தெரிவித்துவிட்டது.

கூகிள் மொழி மாற்றி என்பதால் ctrl+g கொடுத்து ஆங்கிலம் தமிழ் என இரண்டையும் தொடர்ந்து அடிக்கலாம். எளியராக HTML கோடும் கொடுத்துக்கொள்ளலாம்.

இதை ப்ளாக்கரில் இணைப்பதற்கு இரண்டு படிகள் உள்ளது.
முதலில் comment Settings சென்று Embedded below post என்பதை தேர்வு செய்யாமல் விடவேண்டும். அல்லது full page
/pop up window ஆகிய வசதியை தேர்வு செய்துக் கொள்ளவும். இதன் மூலம் பிளாக்கர் தரும் கமெண்ட் பெட்டி உங்கள் பக்கத்தில் இருக்காது.

அடுத்து Edit HTML சென்று, Expand Widget Templates செய்து
</b:includable>
<b:includable id='status-message'> என்கிற வரிகளைத் தேடவும், சரியாக அதன் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.

[அந்த வரிகள் இல்லாவிட்டால் ]
<div class='post-footer'> என்கிற வரியைத் தேடவும் அதற்குச் சரியாக மேலே இந்த நிரலிகளைப் போடவும். [அல்லது]
<data:post.body/> என்ற வரியைத் தேடி அதற்கு கீழே போட்டுவிடவும்.


இனி சாதரணமாக இந்த மறுமொழிப் பெட்டி உங்கள் பக்கத்திற்கு வந்துவிடும் இனி தனியாக தமிழில் தட்டச்சு செய்து காப்பி அடிக்கதேவையில்லை என்பது உண்மையா என்று புரியும்.

வழக்கம் போல இந்த நிரலியும் வலைப்பூவிற்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டால் நன்குயிருக்கும் என நிரலி வழங்கியைத் தனியாக வைத்துள்ளேன். வேண்டிய தலைப்பு, மற்றும் கருத்துச் செய்தி மற்றும் பெட்டியின் நீளத்தைக் கொடுத்து நிரலியை எடுத்துக் கொள்ளலாம்.

ப்ளாக்கருக்கான தமிழ் மறுமொழிப்பெட்டி வழங்கி


பதிவுக்கு ஓட்டுப் போடப் போறீங்களா?
நீங்க பாட்டுக்கு குத்துங்க நான்பாட்டுக்கு எண்ணுறேன்
கருத்துச்சொல்ல
எனக்கு இங்கிலீசு தெரியாது
Loading...

29 comments:

Follow by Email


Share/Save/Bookmark