பிளாக்கர் பின்னூட்டத்தில் முழு HTML பயன்படுத்தலாம்.

. Monday 23 January 2012
11 comments

HTML (மீசுட்டு மொழி) என்பது ஒரு கடல் அதனுடன் ஜாவாஸ்கிரிட் மற்றும் CSS (விழுத்தொடர் பாணித் தாள்கள்) என்ற பெருங்கடல்கள் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் பிரம்மாண்டம்தான். அதனால் தான் என்னவோ பிளாக்கர் மறுமொழிகளில் இதை முழுவதுமாகப் பயன்படுத்தும் படியில்லை(முன்புவொரு காலத்தில் இருந்தது ). மீண்டும் பிளாக்கர் கொண்டு வரும்வரை தற்போதைக்கு NCcode நீட்சி மூலம் பயன்படுத்தலாம். தற்போது CSS மற்றும் கொஞ்சம் ஜாவாஸ்கிரிட்டும் பயன்படுத்தும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னமே இணைத்தவர்களுக்கு தானாகவே இந்த மேம்பாடு சேர்ந்துவிடும். புதியவர்கள் இங்கு சென்று இணைத்துக் கொள்ளலாம். இனி, இதை அப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

டொமைன் பெயர் வாங்குவதன் பின்விளைவுகள்

. Thursday 12 January 2012
6 comments

டொமைன் முகவரி வாங்க வேண்டாம் என்று சொல்லவோ வாங்குங்கள் என்று சொல்லவோ இப்பதிவல்ல. வாங்கும் முன் யோசிக்க வேண்டிய பின் விளைவுகளை மட்டும் பட்டியலிடப்படுகிறது.

களப் பெயர்{Domain Name} என்பது இணைய தளத்தின் இருப்பிடப் பெயர். பெயரிருக்கும் ஒரு இடத்தில் மட்டும் தளத்தை உருவாக்குவது கடிது, உருவாக்கிய எல்லாயிடத்திலும் பெயர் வைப்பது அரிது. அதனால் தான் இரண்டும் வேறு வேறு நிலைகளில் செயல்படுகிறது. இணையதளம் இருக்குமிடத்தை வலைப்பதிவு வழங்கி[blog server] என்றும் முகவரி வாங்குமிடத்தை பெயர் வழங்கி[Name Server] என்றும் சொல்லலாம். பெயருக்கேற்ப பதிவிடுவதை விட, பதிவிற்கேற்ற பெயர் வைப்பது ஒரு சிறந்த உத்தி. ஆகவே பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையில் டொமைன் பெயரென்பது நிலையானதாகவும் அடிக்கடி மாறுவதாகவும் இருக்ககூடாது. ப்ளாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்கள் இலவசமாக வழங்கும் நிலையில் டொமைன் பெயர் வாங்கும்முன் இதற்கு சரியான தேவையுள்ளதா என ஆராய்வது சிறந்தது.

இணைய தமிழ் படிப்பகம் உதயம்

. Monday 12 December 2011
11 comments


தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.

அசல் reply வசதி ப்ளாக்கரில் வேண்டுமா?

. Sunday 4 December 2011
9 comments

update://பிளாக்கரே இவ்வசதியை தற்போது வழங்குவதால் இந்தப் பதிவையும்/நிரல்களையும்{javascript} தவிர்க்கலாம்.///

ப்ளாக்கரையும் வேர்ட்பிரசையும் ஒப்பிட்டு பார்க்கும் எந்தவொரு கணத்திலும் பிளாக்கர் மறுமொழிப் பகுதி என்றுமே பின்னாலிருப்பதை உணரமுடியும். காரணம் வேர்ட்பிரசில் யாருக்கு பதில் அளிக்கின்றோமோ அவருக்கு நேரடியாக கீழே நமது கருத்தைச் சொல்லமுடியும் ஆனால் இதுவரை ப்ளாக்கரில் அந்த வசதியில்லை அதனால் தான் பலர் @ போட்டு அந்த நபரை குறித்து பதில் அளிப்பார்கள். இதற்கு மாற்றாக ஏன் பிளாக்கர் இவ்வசதியை ஏற்படுத்தவில்லை என்பது தெரியாது. விரைவில் அவ்வசதியை ஏற்படுத்தும் அதுவரை reply செய்ய உங்கள் கீ போர்ட்க்கு உதவ ஒரு பிளாக்கர் மறுமொழி நீட்சி அறிமுகம் செய்யப்படுகிறது.

பதினோராயிரம் தமிழ்த் தளங்கள்

. Wednesday 30 November 2011
25 comments

நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும்

மறுமொழி வரிசையை தலைகீழாக்கலாம்

. Thursday 24 November 2011
11 comments

வலைப்பூக்களின் வாசனையின் ஒருபகுதி பதிவாலும் மற்றபகுதி பின்னூட்டத்தாலும் உருவாக்கப்படுகிறது. அத்தகைய பதிவுகள் பதியப்படும் வரிசையில் புதியவை முன்னே வந்துவிடும் இது எல்லா நிறுவன வலைப்பூக்களில் பார்க்கலாம். ஆனால் மறுமொழிகள் அப்படி அமைவதில்லை, புதிய மறுமொழிகள் ஒன்றன் கீழாக ஒன்றாகத் தான் வரிசைப்படுத்தப்படுகிறது. சில பேஸ்புக் போன்ற மறுமொழி இடைச்சொருகளைப் பயன்படுத்தினால் புதிய மறுமொழிகளை முன்னுக்கு கொண்டுவரலாம். ஆனால் அப்படியில்லாமல் பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்றவை தேதிவாரியாக மறுமொழி வரிசைப்படுத்தும் வசதியை இதுவரை தரவில்லை.

வாக்கிய ஒப்பீடு செயலி -அறிமுகம்

. Thursday 17 November 2011
3 comments


தேங்கியூ, தேங்கியூ தேங்கியூ என்று நீங்கள் எழுதிக் கொடுத்தவொன்றை மங்கியூ, மங்கியூ, மங்கியூ என்று யாராவது எழுதினால் கோபம் வருகிறதா? அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை மாற்றி எழுதி உங்கள் எழுத்தில் கலப்படம் செய்தால் கோபம் வருகிறதா? பத்திரிக்கைக்கு அனுப்பிய படைப்புகளில் கத்திரிக் கோல் விழுந்த இடங்களை கண்டுபிடிக்க வேண்டுமா? ஒரே அறிக்கையை ஒவ்வொரு தேர்தலிலும் வருகிறதாவென ஒப்பிட வேண்டுமா?
இதற்கொல்லாம் உதவ வாக்கிய ஒப்பீட்டுச் செயலி அறிமுகமாகியுள்ளது. {தமிழ் என்றில்லை மற்ற மொழிகளுக்கும் இது பயன்படுத்தலாம்.}

Follow by Email


Share/Save/Bookmark
Share